TAMIL CURRENT AFFAIRS - 17.12.2021

1

 சட்டத் திருத்தங்கள் 

  • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் சேர்க்கை நடைமுறையை எளிதாக்க உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு அமைச்சரவை ஒப்புதல் அறிவித்துள்ளது.


  • பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.( நாடு முழுவதும் பெண்ணின் வயது 18 திருமணம் நடைபெறுகிறது இந்நிலையில் 2020 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி பெண்ணின் திருமண வயதை 21 ஆக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார். தற்போது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் “ஜெயா ஜெட்லி” குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இதற்கு நான்கு சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளது).


  • தேர்தல் சீர்திருத்தங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதியை அடிப்படையாக வைத்து 18 வயது நிறைவு செய்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படுகின்றன, இதனால் ஜனவரி 2ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் இதற்கு தீர்வு காண ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த உள்ளது.


  • 2021 முதல் 2026 வரையான காலத்தில் பிரதமரின் வேளாண் பாசன திட்டம் அமலாக்கத் துறை ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தமிழகத்தில் 18 25 ஆண்டுகள் பணிபுரிந்து 203 போலீஸாருக்கு மத்திய அரசு விருது : 


  •  காவல்துறையில் எவ்வித குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது. 

  • இதில் 18 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு “உட்கிருஷ்டி சேவா பதக்  விருது” 

  • 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு “அதி உட்கிருஷ்டி சேவா பதக்  விருதும்” வழங்கப்படுகிறது.


ஏ எப் எஸ் பி ஏ :  

  • ஆகஸ்ட் 8ஆம் தேதி 1942 இல் தொடங்கிய “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நசுக்குவதற்கு அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய சிறப்பு அதிகாரச் சட்டம்.

  •  நாட்டின் விடுதலைக்குப் பின்பு 1958 செப்டம்பரில் “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்” ஆக உருவெடுத்தது 1958இல் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் பிரதமர் மோடி வலியுறுத்தல் : 


  • இயற்கை விவசாயத்திற்கு மாற இது தான் சரியான தருணம் என இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார் .

  • இந்த இயற்கை வேளாண்மை மாநாடு குஜராத்தில் நடைபெற்றது.

  •  நாட்டின் பசுமை புரட்சியில் ரசாயனம் மற்றும் உரங்கள் முக்கிய பங்கு வகித்தது உண்மைதான், ஆனால் இந்த முறையில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை உட்கொள்ளும் மனிதர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் எனவே இப்போது மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

  •  வேளாண்மை தொடர்பான பிரச்சினைகள் மேலும் பெரிதாக மாறுவதற்கு சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இதுதான் சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  •  இயற்கை விவசாயத்தால் 2 ஹெக்டர்  குறைவாக நிலம் வைத்துள்ள 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  •  இதன் மூலம் ரசாயன உரங்களுக்கு செலவிடும் தொகையை மிச்சப்படுத்தலாம் இயற்கை விவசாயத்தில் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும்.

  •  பசுக்களின் சாணம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம் இயற்கை வேளாண்மையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம் என்றும் அதற்கு விவசாயிகள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  •  மேலும் இம்மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் இயற்கை வேளாண் முறையில் பயிரிடப்படும் பொருட்களை கண்டறிய ஆய்வகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  •  இந்த ஆய்வகம் மூலம் ஆர்கானிக் தயாரிப்புகளுக்கு அளிக்கப்படும் .

  • இவ்வித சான்று பெற்ற வேளாண் பொருட்களுக்கு விவசாயிகள் கூடுதல் விலையை பெற முடியும் என்றும் கூறினார்.


முப்படை தளபதிகள் குழு தலைவர் ஆனார் நரவானே: 


  • முப்படை தளபதிகள் குழு தலைவராகிறார் ராணுவ தளபதி ஜெனரல் எம்எம் ரவானே,

  • அதாவது மனோஜ் முகுந்து நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

  •  நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத்.


இந்து குழும தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மைய விருது : 

  • 2022-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  •  கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையம் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

  •  இந்த மையத்தில் பயின்று இதழியல் துறையில் சிறப்பாக செயல்படுவதை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.


#தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25


ஓமிக்ரோன் வைரஸ் குறிப்பு : 

  • ஓமிகிரான் திரிபு (SARS COV 2 Omicron Variant)  தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் வேற்றருவம் ஆகும். 

  • இந்த வகை கொரானா வைரஸ் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஆங்காங், இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

  •  ஆல்பா பீட்டா என்ற உரு மாற்றங்களை தொடர்ந்து வைரஸின் மரபணு வரிசையில் பி 1.1 .529 எனும் புதிய பிரிவு ஏற்பட்டு ஓமைக்ரான் வேற்று உருவம் தோன்றியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

  •  RT PCR பரிசோதனைகள் மூலம் நோய் பரவல் தன்மையை கண்காணிக்க முடியும் என்றும் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

  •  ஓமைக்ரான் அறிகுறிகள் : ஓரிரு நாட்கள் பசியின்மையும், தலைவலி, மற்றும் உடல் வலி ஆகிய பாதிப்புகள் மட்டுமே அறியப் பட்டது.

  •  40 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினரை இந்த ஓமைகிரான்  தாக்குகிறது என்று குறிப்பிடுகிறார்.


Post a Comment

1Comments
  1. Casino Bonus: Play Slots at WI Casinos
    Casinos in Wisconsin are 안전바카라 open-gambling and 슬롯 사이트 allow for legal online play, without 승인전화없는 사이트 the need 마틴 배팅 to register. That's why 가입시꽁머니사이트 we're a major provider of online gaming

    ReplyDelete
Post a Comment