“அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க புதிய மசோதா”
உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்.
அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய கட்ட மசோதா, வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின் படி அகற்றப்படுகிறது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட மசோதா, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.
மேலும் ,நீர்நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“விஜய் திவாஸ் - டிசம்பர் - 16”
1971 - இல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் (டிசம்பர் - 3ஆம் தேதி - டிசம்பர் - 16 ஆம் தேதி வரை) , டிசம்பர் - 16 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தனர்.
இந்தியா அப்போரில் வெற்றிவாகை சூடியது.
அப்போரின் 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னையில் கொண்டாடப்படுகிறது.
இந்தப் போரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டிசம்பர் 16-ம் தேதியை “ விஜய் திவாஸ் “ என்று இந்தியா கொண்டாடி வருகிறது.
போர் காரணம் :- வங்கதேச விடுதலைப் போராட்டம்.
அப்போது இந்திய பிரதமர் - இந்திராகாந்தி.
அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி - யஹ்யா காண் .
வங்கதேச முதல் பிரதமர் - ஷேக் முஜிபூர் ரஹ்மான்.
1971இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்தியாவிடம் எந்தவித நிபந்தனையும் இன்றி சரணடைவதாக மேற்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய வங்கதேசம் )பாகிஸ்தான் படைகளுக்கான தலைவர் வெப்டினன்ட் ஜெனரல் நியாஸி , வரலாற்று சிறப்புமிக்க சரண் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
1971 - ல் போரில் இந்திய ராணுவத்துடன் இணைந்து வங்கதேசப் படை முக்தி பாஹினியும் வெற்றி பெற்றது .
.சரணடையும் ஒப்பந்தத்தில் நியாஸி (பாகிஸ்தான் தலைவர்) கையெழுத்திட்ட பின்னர் லெப்டினன்ட் ஜெனெரல் - ஜெக் ஜித் சிங் கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார்.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்ற நிலையில், 50வது ஆண்டு விழாவில் இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் “ராம்நாத் கோவிந்த்க்கு” - வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது அழைப்பு விடுத்திருந்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரும் பேச்சு வார்த்தை (அந்நாட்டு அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).
“ எண்ம பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு”
பீம் - யுபிஐ (BHIM-UPI) , ரூபே டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 2000 வரையிலான எண்ம பரிவர்த்தனைகளில், பரிவர்த்தனை கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
மேலும் பீம் - யுபிஐ, ரூபே டெபிட் கார்டுகள் மூலமாக நடைபெறும் எண்ம பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகையாக வங்கிகளுக்கு அரசு அளிக்கும் .
ஒதுக்கப்பட்ட நிதி 1300 கோடி.
“இல்லம் தேடி கல்வித் திட்டம்:-”
மாணவர்கள் கற்றல் இடைவெளி, இழப்புகளை குறைத்திடும் வகையில் ,இத்திட்டம் கொண்டு வரப்பட்டது .
மாலை 5 - 7 மணி வரை.
“இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளையின் புதிய தலைவர்.”
இந்திய மருத்துவ சங்கம் - தமிழக கிளையின் 68 -ஆவது தலைவராக - கோவையைச் சேர்ந்த டாக்டர். ஆர். பழனிச்சாமி பதவியேற்றுள்ளார் .
“செமிகண்டக்டர் தயாரிப்புக்கு - நிதி ஒதுக்கீடு:”
தற்போது உலகம் முழுவதும் செமி கண்டக்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் தயாரிப்பில் "தைவான்" முதன்மை இடத்தில் உள்ளது.
இந்தியா அதன் செமிகண்டக்டர் தேவைகளும் முழுவதும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது( சீனா )
இந்நிலையில், இந்தியாவிலே - செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நிதி ஒதுக்கிட்டு - தைவான் செமி கண்டக்டர் நிறுவனமான டி எம் சி, இண்டல் ,ஏ எம் டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்தோசனையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
“வாக்காளர் அட்டை ஆதார் இணைக்கப்படும்:-”
தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க ப்படும்.
இதனால், ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
தற்போது , ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர் சேர்ப்பு நடக்க உள்ளது .
ஆண்டுக்கு 4 தேதிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக வாக்காளர் சேர்ப்பு பணிகள் சார்ந்த மசோதா வழிவகுக்கிறது.
தற்போதைய நிலையில் , பணிசார்ந்த ராணுவ வீரர் வெளியூர் சென்று விட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும்.
ஆனால் ,பெண் ராணுவ அலுவலர் ஊரில் இல்லாவிட்டால் அவருடைய கணவரால் வாக்களிக்க முடியாது. எனவே ,கணவரும் வாக்களிக்கும் வகையில்,இது தொடர்பான சட்டப்பிரிவில் "மனைவி" என்ற வார்த்தைக்கு பதிலாக "வாழ்க்கை துணைவர்" என்ற வார்த்தையை சேர்ப்பதற்கு மசோதா வழிவகுக்கிறது.
“கூடங்குளத்தில் 3,4 - வதுஅணுஉலைகள் 2023-இல் நிறைவடையும்:-”
2023 ஆம் ஆண்டில் தொடங்கி; 2023 ஆம் ஆண்டே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணு மின்சார உற்பத்தி திறன் 40% மேல் அதிகரித்துள்ளது. ( 4780 MW - இலிருந்து 6780 MW) ஆக உயர்ந்துள்ளது.
நாட்டுக்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் விதமாக உள்நாட்டு மூன்று நிலை அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா பின்பற்றி வருகிறது .
இது தவிர வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன், இலகு நீர் அணு உலைகள் அடிப்படையிலான தூய்மையான மின்சாரத்தை வழங்குவதற்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 MW உற்பத்தித் திறன் கொண்ட 3, 4 - ஆம் அணு உலைகளை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு திட்டவட்டம்.
“ பி .ஹெச்டி., எம் .ஃபில், பயிலும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு:-”
கல்லூரிகளுக்கு யு.ஜி.சி உத்தரவு.
யு.ஜி.சி சட்டம், 2016 - இன் படி எம் .ஃபில், பி .ஹெச்டி படிப்புகளை படித்து வரும் மாணவி களுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
அவர்களின் படிப்புக் காலத்தின்போது 240 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கலாம்.
“கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை நிதி:-”
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூபாய் 150 வழங்குவதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது.
“உ பா” சட்டம்:-
உ பா சட்டத்தின் பிரிவு 43 D(5)
1967 - ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உபா சட்டம் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் பலப்படுத்தப்பட்டது.[ UAPA - Unlawful Activities (prevention) Act:- 1967]
“பன்னாட்டு நிறுவன தலைவர்கள் பட்டியலில் இந்திய பெண்:-”
இந்திய வம்சாவளியான லீனா நாயர் ; யுனிலீவர் நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரியாக இருந்து ,பின் அங்கிருந்து விலகி லக்ஸரி பேஷன் ஹவுஸ் சேனலின் தலைமை செயல் அதிகாரியாக லீனா நாயர் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார் .
இதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் உள்ள சுந்தர்பிச்சை , பராக் அகர்வால், சத்ய நாதெல்லா வரிசையில் லீனா நாயரும் இணைய உள்ளார்.
“ஆசிய ஹாக்கி : இந்தியா அபார வெற்றி:-”
இந்தியா - வங்கதேசத்தை எதிர்த்து அபார வெற்றி பெற்றது.
காமன் வெல்த் பளுதூக்கும் போட்டியில் - இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 96 கிலோ பிரிவில் களம் கண்ட அவர் 150 கிலோ ,கிளீன்&ஜெர்க் பிரிவில்,189 கிலோ என மொத்தமாக 339 கிலோ எடையைத் தூக்கி 3- ஆம் இடம் பிடித்தார்.
“அணுசக்தி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.நா.வுக்கு ஈரான் அனுமதி”
கராஜ் அணு சக்தி மையத்தில் இஸ்ரேல் சதி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து , அந்த மையத்தில் பழுதான ஐ ஏ இ ஏ - வின் கண்காணிப்பு கேமராக்களை மாற்றிக்கொள்ள அந்த அமைப்புக்கு ஈரான் அனுமதி மறுத்து வந்தது.
தற்போது, அவற்றை மாற்றிவிட்டு புதிதாக கேமராக்களை பொருத்தி கொள்ள ஐ ஏ இ ஏ - வுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 27 புள்ளி 16% அதிகரிப்பு.
“சூரியனைத் தொட்ட “நாசா விண்கலம்”
இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ள "பார்க்கர்" விண்கலம் முதன் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
ஃப்ளோரிடா மாகாணம், கேப் கார்னிவல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து சக்தி வாய்ந்த அலையன்ஸ் டெல்டா 4 வகை கனரக ராக்கெட்டுகள் மூலம் பார்க்கர் விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பார்க்கர் - குறிப்பு:-
தற்போது சூரியனின் காற்று மண்டலத்துக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளது.
7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனை 24 முறை நீள்வட்டப்பாதையில் வலம் வரும் என தெரிவித்துள்ளனர்.
2025- ஆம் ஆண்டு வரை வலம் வரும்.
சூரியனை 24 முறை நெருங்கிக் கடக்கும் .
அதிகபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி .மீ நெருக்கத்தில் செல்லும்.
1300’c வெப்பத்தை தாங்கும்.
மணிக்கு 7 லட்சம் கி. மீ வேகம் செல்லும் .
For more details:
Scholarship test Registration Link :
https://www.tejusacademy.com/p/scholarship-test.html
Test Pack Batch Registration Link : https://www.tejusacademy.com/2021/12/test-batch-registration-form.html
