CURRENT AFFAIRS - TAMIL - 15.12.2021

0

 “தமிழக அரசு பேருந்துகளில் " பேனிக் பட்டன் "”


 நிர்பயா திட்டத்தின் கீழ் "பேனிக் பட்டன் " அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி.

 

"நிர்பயா திட்டம் "


     நிர்பயா திட்டம் என்பது 2013 ஆம்  ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது .


     இத்திட்டத்தின் அன்றைய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் - இந்தியாவின் மாண்பைப் பாதுகாக்கவும் ,பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முயற்சிகளை அதிகரித்ததாக தெரிவித்தார் .

      

     " நிர்பையா" - பொருள் :" அச்சமின்றி" -2012 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட புனைபெயர்.

   

     இதில் வரும் நிதியின் மூலம்  நாடு முழுவதும் "சாகி" எனப்படும் பெண்களின் பிரச்சைகளுக்கான ஒற்றைத்தீர்வு மையங்கள் உருவாக்கப்பட்டன     


 “சிங்காரச் சென்னை 2.0”

             சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் பசுமை சென்னை,நலமிகு சென்னை,கல்வியியல் சென்னை,தூய்மை சென்னை,எழில்மிகு சென்னை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

            இத்திட்டத்தின் கீழ் , சாலைகளில் வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் அடங்கிய பெயர்ப்  பலகைகளை வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.   


“2021 துடிப்பான குஜராத் மாநாட்டிற்கு முன் இயற்கை விவசாயம் - தேசிய மாநாடு”


 இடம் :- சர்தார் பட்டேல் அரங்கம் , அமுல் பண்ணை, ஆனந்த், குஜராத்.


இயற்க்கை விவசாயத்தின் பலன்கள் :     

  • மண் வளம் , உற்பத்தித்திறன் அதிகரிப்பு.   

  •  பயிர்களில் நோய்கள்,பூச்சி தாக்குதல் குறைவு.   

  •  குறைவான தண்ணீர் தேவையில் அதிக விளைச்சல்

  • இயற்கையான உயிரி வளங்களின் அளவான பயன்பாடு.     

  • குறைந்த  முதலீடு, அதிக லாபம்.      

  •  சூழலியல்  சமனைக்  காப்பதில் உறுதுணை.        

  • ரசாயனம் இல்லா விவசாயத்திற்கு ஊக்கம். 

.


இம்மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய நபர்கள் ;-


     1. குஜராத்  கவர்னர் - ஆச்சர்யா  தேவ்ரத் 


      2.மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் - அமித் ஷா .


      3.விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் - நரேந்திர சிங் தோமர்.


    4. குஜராத் முதல்வர் - பூபேந்திரபாய் பட்டேல்.   



பாங்க் ஆஃப்  மகாராஷ்டிரா -வீடு,கார் கடன் வட்டி குறைப்பு”

  

 பொதுத் துறை வங்கியான - பாங்க் ஆஃப்  மகாராஷ்டிராவில் 

      

      வீட்டு கடன் வட்டி  -6.80% -இலிருந்து- 6.40% ஆக குறைப்பு.


      கார் கடன் வட்டி -7.05%  இலிருந்து - 6.80% ஆக குறைப்பு.


“எல்.ஐ .சி  நிறுவனம் சார்பில் "தன் ரேகா " ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்” 


-> "தன்ரேகா" - தனி நபர் ஆயுள் காப்பீடு  திட்டமாகும்.


->  இதில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன.


         >பெண்களுக்கு சிறப்பு பிரீமியம் விகிதம் உண்டு.


         >மூன்றாம் பாலினத்தவரும் இத்திட்டத்தில் சேர முடியும்.


“இந்தோனேசியாவில் நிலநடுக்கம் :”

        

      இந்தோனேசியாவில் ஈஸ்ட் நுஸா டெங்காரா மாகாணத்தின் வடக்குப்பகுதியில் - அடோனரா , மவ்மேர்   உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.

      

      இந்த நிலநடுக்கம் கடலை சுற்றியுள்ள தீவுகள் மட்டுமின்றி ஈஸ்ட் நுஸா டெங்காரா மாகாணத்திலும் உணரப்பட்டது.

      

   ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவு    


இந்தியாவின் வளர்ச்சி 9.7% ஆக குறையும் ஏடிபி  கணிப்பு”

   

   நடப்பு நிதி ஆண்டில்   இந்தியாவின் வளர்ச்சி 10% இருக்கும் என கணித்த ஏடிபி (ஏசியன் டெவலப்மன்ட் பேங்க்)


   தற்போது அதை 9.7% குறைத்துள்ளது.


  விநியோக சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக,  இந்திய நிறுவனங்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளது , அதன் காரணமாக 0.3% வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.


“மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி 6 மாதத்தில் தயாராகும் -  சீரம்  நிறுவனம்” .


  கோவாக்ஸினைத் தயாரிக்கும் மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டி டியூட்  ஆஃப் இந்தியா விரைவில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு "கோவோவாக்ஸ் "என்ற பெயரில் மருந்து வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது


 “வை.மு.கோதைநாயகி” 


    1925 - முதல் முறையாக காந்தியடிகளை சந்தித்தார்.


    அம்புஜத்தம்மாள் தொடங்கிய " சுதேசி லீக் " சங்கத்தில் உறுப்பினர் ஆனார்.


    பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதியார் பாடல்களையும் ,தாம் எழுதிய தேச பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.


 1932 - இல் சிறையில் இருந்தபோது" உத்தம சீலன் "நாவலை எழுதினார்.


 சிறை கைதிகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில்" சோதனையின் கொடுமை" என்ற நாவலையும் சிறையில்  எழுதி வெளியிட்டார்.


1925 - இல் "ஜகன்மோகினி" இதழின் ஆசிரியர் ஆனார்


மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் விஞ்ஞானிகளுடன் ஆளுநர் N.R.Ravi ஆலோசனை”


திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும  வளாக விஞ்ஞானிகளுடன் தமிழக ஆளுநர் -  கலந்துரையாடினார் 


அங்கு பேசிய ஆளுநர் விஞ்ஞானிகளாகிய உங்கள் அனைவருடைய சிறப்பான பங்களிப்பினால் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது, இதேபோல் செயலாற்றி இந்தியாவை முதலிடத்திற்கு   கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.


“நெதர்லாந்தில் உள்ள சோழ மன்னர்களின் சாசனம் மீட்கப்படும்”


 நெதர்லாந்தில்உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழமன்னர்களின் சாசனங்களை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறை மூலம் அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கலாச்சார சுற்றுலாத்  துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.


“பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக்கும் ஐ . நா. தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு”


பருவநிலை மாற்றம் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போர்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.


 ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி,வெள்ளம் போன்றவை உலக அமைதியை நிலைநாட்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பணிகளை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.


பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. நெறிமுறை வகுப்பு கூட்டமைப்புதான்(UNFCC) தற்போது இந்த விவகாரத்தை கணித்து  வருகிறது.


 இந்த நிலையில் பருவநிலை மாற்றம் என்பது பாதுகாப்பு அச்சுறுத்தலாக  விவகாரம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்  இந்த விவகாரத்தில் ஐ .நா பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்கு வழி வகுக்கும்.


 இதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


 “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் பயணம்” 


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் பயணம்.


காரணம்:


கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது.

 அந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியை யடுத்து, வங்கதேசம் தனிநாடாக உருவானது.


 இந்த வெற்றி தினத்தின் பொன்விழா, வங்கதேசத்தின் 50 - வது சுதந்திர தினம் டிசம்பர் 16-ம் தேதியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் செல்கிறார்.







For more details:


Scholarship test Registration Link :

https://www.tejusacademy.com/p/scholarship-test.html

Test Pack Batch Registration Link : https://www.tejusacademy.com/2021/12/test-batch-registration-form.html


Post a Comment

0Comments
Post a Comment (0)